புதுடெல்லி: ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு ஈரான் கட்டுப்பாடு விதித்தது. இதனால் நூற்றுக்கணக்கான கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் காத்துக் கிடக்கின்றன. இதனால் எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டது.
உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இந்தியா ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்திய இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதி பெற்றன. இதனால் ஈரான் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 8 எரிபொருள் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா வந்துள்ளன.
கடந்த 1-ம் தேதி ஜக் வசந்த் என்ற எல்பிஜி கப்பல் மும்பை வந்தடைந்தது. இந்நிலையில் க்ரீன் ஆஷா, க்ரீன் சான்வி என்ற இரண்டு இந்திய எல்பிஜி டேங்கர் கப்பல்கள் வளைகுடாவை கடந்து வந்து கொண்டிருப்பதாக கப்பல் கண்காணிப்பு தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
ஜக் விக்ரம் என்ற மற்றொரு கப்பல் ஹார்முஸ் ஜலசந்திக்கு மேற்கே காத்துக் கிடக்கிறது. இதுவும் விரைவில் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More Stories
தற்காலிக போர்நிறுத்த நடவடிக்கைக்காக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க முடியாது: ஈரான் திட்டவட்டம்
மக்கள் எதிர்ப்பு எதிரொலி: பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80 குறைப்பு
ஈரானின் மிக உயரமான பாலம் அழிக்கப்பட்டது: ட்ரம்ப்