உதகை: உதகையில் மலை காய்கறிகளின் விலை 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் நீலகிரி மாவட்டம் உதகையில் மலை காய்கறிகளின் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்து, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலைகள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. ஒரு கிலோ பட்டாணி ரூ.300 வரை விற்கப்படுகிறது.
உதகை மாவட்டத்திற்கு தென்மேற்கு பருவமழை பிரதானமான ஒன்று, இந்த பருவமழையின் போது உதகையில் சுமார் 130 செ.மீ வரை மழை பதிவாகும். இதன் காரணமாக உதகையில் அனைத்து நீர்நிலைகளும் பெரும்பாலும் நிரம்பி விடும். இதனால் உதகை விவசாயிகளின் மகசூல் அதிகரித்து காணப்படும். ஆனால் இந்த ஆண்டை பொறுத்தவரை எல்-நினோ தாக்கம் காரணமாக தென்மேற்கு பருவமழை பொய்த்துள்ளது. இதனால் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு இருப்பதால் காய்கறிகளின் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.
இதனால் தற்போது 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மலைகாய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 1 கிலோ கேரட் விலை ரூ.30-ஆக இருந்த நிலையில் தற்போது, இது ரூ.80 முதல் ரூ.90-ஆக உள்ளது. பீட்ரூட் விலை கிலோ ரூ.40ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.100 வரை விறபனையாகி வருகிறது. ஒரு கிலோ பச்சை பட்டாணி ரூ.150 என கடந்த மாதம் ஏலம் போன நிலையில், தற்போது ரூ.300-க்கு ஏலம் போயுள்ளது. 45 கிலோ எடை கொண்ட ஒரு உருளை கிழங்கு மூட்டை ரூ.3,500 வரை ஏலம் போயுள்ளது. இதனால் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு மலைக்காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதற்கு எல்நினோ தாக்கம் மற்றும் விளைச்சல் குறைவு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

More Stories
நடப்பு 2026-27 முதல் காலாண்டில் ரூ.82,000 கோடிக்கு இந்திய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி
தங்கம் விலை பவுனுக்கு ரூ.600 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம்
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,05,240க்கு விற்பனை!!