March 18, 2026

10th English exam : ஆங்கில தாள் சற்று கடினம்.. மதிப்பெண் குறைந்துவிடுமோ என மாணவர்கள் அச்சம்..

    தமிழ்நாட்டில் துவங்கியது 10ம் வகுப்பு பொதுத் தேர்வு. தமிழ்நாடு, புதுச்சேரியில் 9.09 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

    தமிழ்நாட்டில் +1, +2 வகுப்புகளுக்கான பொது தேர்வு நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது, 10ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வும் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வில் சுமார் 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 பேர் மற்றும் தனித் தேர்வர்கள் 26 ஆயிரத்து 196 என மொத்தம் 9 லட்சத்து 9 ஆயிரம் பேர் எழுதினர். இது தவிர, பத்தாம் வகுப்பில் 395 சிறைவாசிகளும் தேர்வு எழுதி உள்ளனர். இந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 4219 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    அண்மையில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வில் வினாத்தாள் எளிமையாக கேட்கப்பட்டிருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ஆங்கில தேர்வு நடந்து முடிந்துள்ளது. தமிழ் வினாத்தாளை விட ஆங்கில வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மாணவர்கள் தெரிவித்ததாவது; ” பத்தாம் வகுப்புக்கான ஆங்கில தேர்வு தற்போது நடந்து முடிந்துள்ளது. கேள்விகள் ஒவ்வொன்றும் கடினமாக தான் இருந்தது. படிச்சிட்டு போன சில கேள்விகள் வரும் எதிர்பார்த்தோம். ஆனால் அது வரல, அதனால பெரும் கவலையாயிடுச்சு. முன்னதாக எழுதிய தமிழ் தேர்வானது எளிதாக இருந்தது. படித்துச் சென்ற அனைத்து கேள்விகளும் வந்தது. அதே போல தான் இந்த ஆங்கில தேர்விற்கும் வந்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை விட கேள்விகள் சற்று அதிகமாக இருந்தது. எப்போதும் ஆங்கிலம் என்றாலே கடினமான தேர்வு தான். குறிப்பா பெரு வினாக்கள் கடினமாக உணர்ந்தோம். இனி வரப்போற தேர்வுகளுக்கு இன்னும் நன்றாக படித்து விட்டு வரவும். அடுத்ததாக கணித தேர்வு எழுத உள்ளோம்” என்றனர் மாணவர்கள்.

    Spread the love