சென்னை: 151 உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களைக் கைவிட்ட தவெக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி மற்றும் பிரசாந்த் சென் ஆகியோர் தமிழ்நாடு அரசின் சார்பில் நியமிக்கப்பட்டிருந்தனர். தமிழ்நாடு அரசுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் அரசின் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை என மருத்துவர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. அரசு மருத்துவர்களுக்கான தொகுப்பில் இருந்து 151 இடங்களைச் சரண்டர் செய்ய நேற்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து தமிழ்நாடு அரசு நியமித்த இரு மூத்த வழக்கறிஞர்களும் நேற்று வழக்கு விசாரணையின்போது ஆஜராகவில்லை. வழக்கறிஞர்கள் ஆஜராகாததால், நீதிபதி கேள்வி எழுப்பும் நிலையும், தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர்களைத் தேடும் நிலையும் ஏற்பட்டது. 151 இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்குச் சரண்டர் செய்வதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு கூடத் தெரிவிக்கப்படவில்லை. 151 மருத்துவ இடங்களை இழந்தது முழுக்க முழுக்க தவெக அரசின் நிர்வாகத் தோல்வியே என மருத்துவர் சங்கம் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

More Stories
“கனிம வளப் பாதுகாப்பில் தவெக அரசு உறுதியான கொள்கை அறிவிப்பை வெளியிட வேண்டும்” – தி.வேல்முருகன்
ஒன்றிய அளவிலான கபடி போட்டி பள்ளபட்டி அரசு பள்ளி மாணவிகள் சாம்பியன் பட்டம் வென்று சாதனை.
“முதல்வர் விஜய் பெங்களூருவுக்கு பதிலாக டெல்லி செல்ல வேண்டும்” – மேகேதாட்டு விவகாரத்தில் துரைமுருகன் கருத்து