November 18, 2026

17 ஆண்டுகளில் இந்தியாவில் 1,765 யானைகள் உயிரிழப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 17 ஆண்​டு​களில் 1,765 யானைகள் உயி​ரிழந்​துள்ளன. தகவல் அறி​யும் உரிமைச் சட்டத்தின் கீழ், கேட்​கப்​பட்ட கேள்விக்கு மத்​திய சுற்​றுச்​சூழல் அமைச்​சகம் அளித்​துள்ள பதில்: கடந்த 2009 முதல் 2026 வரை 1,765 யானை​கள் உயி​ரிழந்​துள்​ளன. இதில் மின்​சா​ரம் தாக்கி மட்டும் 1,185 யானைகள் உயிரிழந்துள்ளன.

இதைத் தவிர, ரயில் மோதி 277, வேட்​டை​யாடப்​பட்டு 222, விஷம் வைத்​த​தால் 81 யானை​கள் உயி​ரிழந்​துள்​ளன. நாட்​டிலேயே அதிகபட்​ச​மாக ஒடி​சா​வில் 371 யானை​கள் உயி​ரிழந்​துள்​ளன. அடுத்து அசாமில் 356, கர்​நாட​கா​வில் 223 யானை​களும் உயிரிழந்துள்​ளன. ஒடிசா (238), கர்​நாடகா (195), அசாம் (191) மாநிலங்​களில் மின்​சா​ரம் தாக்​கிய​தில் யானை​கள் உயிரிழந்துள்ளன.

ரயில் மோதி அசாமில் 90, மேற்கு வங்​கத்தில் 68, ஒடி​சா​வில் 45 யானை​கள் உயி​ரிழந்​துள்​ளன. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து ஆர்​டிஐ மனு தாக்​கல் செய்த நொய்​டாவைச் சேர்ந்த சுற்​றுச்​சூழல் ஆர்​வலர் அமித் குப்தா கூறும்​போது, “மின்​சா​ரம் தாக்கி யானை​கள் உயி​ரிழப்​பது விபத்து அல்ல; அலட்​சி​யம். யானை வழித்​தடங்​களில் சட்​ட​விரோத​மாக அமைக்​கப்​படும் மின்வேலிகள், தாழ்​வாகத் தொங்​கும் மின்​கம்​பிகள் மற்​றும் காப்புறையற்ற மின்​பாதைகளே இதற்​குக் காரணம். இதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்​றார்.

Spread the love