February 13, 2026

பழனியில் அதிமுகவினர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்கள்

 பழனி பிப்ரவரி 12 

அதிமுக கழக சார்பில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் குகன் தலைமையில்
கடந்த ஐந்து ஆண்டுகளில் விலைவாசி உயர்வால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் கூடுதல் சுமைகள் குறித்து கேட்டறிந்தும்  கழக பொதுச்செயலாளர் அறிவித்த 5 தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பழனி பகுதிகளில் அதிமுகவினர்  வீடு வீடாக சென்று வழங்கி விழிப்புணர்வு
பிரச்சாரம் செய்தனர்.

முன்னிலையில் இருந்து கலந்து கொண்டவர்கள், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் ரவி மனோகரன், மாவட்ட கழகப் பொருளாளர் வேணுகோபாலு, பழனி நகர செயலாளர் முருகானந்தம், மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்வர்தீன்,  கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் மாரியப்பன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சதீஷ்குமார், நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் குமார், கிளைகழக செயலாளர் ஜெயராமன், நகரக் கழக துணைச் செயலாளர் சிவசுப்பிரமணி,  பிரதிநிதி நடராஜ், நகர கலை இணைச்செயலாளர் பாண்டியம்மாள், முருகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமான ஒரு கலந்து கொண்டனர் 

Spread the love