February 19, 2026

கீழக்கரையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகரில் உள்ள தனியார் மஹாலில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் “டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா” நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா துணைத் தலைவர் ஹமீது சுல்தான் தலைமையில் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணவேணி மற்றும் சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளுக்கு ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் 30 வகையான விளையாட்டு உபகரணங்கள் தலா 2 தொகுப்பு வீதம் மொத்தம் 42 விளையாட்டு தொகுப்புகள் வழங்கப்பட்டன. வார்டு உறுப்பினர்கள் மூலம் அந்தந்த பகுதிகளில் செயல்படும் விளையாட்டு அணிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன. நகரமைப்பு ஆய்வாளர் ஸ்ரீராம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இளைஞர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்களை பெற்றுக்கொண்டனர். இந்த முயற்சி, கீழக்கரை நகரில் இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தையும் திறமைகளையும் மேம்படுத்தும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Spread the love