February 19, 2026

நாமக்கல் கிழக்கு மாவட்டம்,

இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி வெண்ணந்தூர் பேரூர் கழகத்திற்கு உட்பட்ட பாகம் மற்றும் வார்டு கழக இளைஞர் அணி நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் 19.02.2026 வியாழக்கிழமை காலை 08.00 மணியளவில் நடைபெற்றது.

மாண்புமிகு கழக இளைஞர் அணி செயலாளர் இளந்தலைவர் அவர்களின் அறிவுரையின்படி நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர்,பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் , மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி., கழக இளைஞர் அணி துணைச் செயலாளர், தாட்கோ தலைவர்  திரு. நா.இளையராஜா , கழக இளைஞர் அணி துணைச் செயலாளர் திரு.சி.ஆனந்தகுமார், கழக இளைஞர் அணி துணைச் செயலாளர் திரு.பி.எஸ்.சீனிவாசன் ஆகியோரின் வழிகாட்டுதலோடு, பேரூர் கழக செயலாளர் திரு.R.S.S.ராஜேஸ் தலைமையில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் திரு.சு.சண்முகம் மேற்பார்வையிலும் எனது முன்னிலையிலும் 

நடைபெற்ற இக்கூட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இரா.பிரபாகரன்,பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் திரு.மணிகண்டன் மற்றும் துணை அமைப்பாளர்கள்,புதியதாக நியமிக்கப்பட்ட வார்டு அமைப்பாளர்,துணை அமைப்பாளர்கள்,பாகம் அமைப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.

இக்கூட்டத்தில் மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசனைகளை வழங்கி நிர்வாகிகள் அறிவிப்பு வெளியாகிய கழகத்தின் முரசொலி நாளிதழினை அனைவருக்கும் வழங்கினர்.

Spread the love