February 19, 2026

பொங்கல் வைத்து கொண்டாடிய 41அ வட்ட கழக திமுகவினர்

திருப்பூர் மத்திய மாவட்ட தெற்கு மாநகர பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 41 அ வட்ட கழக அலுவலகம் முன்பு தெற்கு மாநகர மகளிர் அணி அமைப்பாளர் விஜயா ஏற்பாட்டில் மகளிர் உரிமை தொகை பெறும் அனைவருக்கும் ரூபாய் 5000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைத்ததை மகிழ்ச்சியோடு கொண்டாடும் விதமாக மாரியம்மன் கோவில் முன்பு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்து கொண்டாடப்பட்டது இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட துணைச் செயலாளர் முன்னாள் பொங்கலூர் சேர்மன் வழக்கறிஞர் குமார் கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்து சிறப்பித்தார் அவருக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டது மேலும் இந்த நிகழ்வில் பகுதி செயலாளர் முருகசாமி,41 அ வட்டக் கழக செயலாளர் பாண்டி, முன்னாள் வட்டக் கழக செயலாளர் குமார், நிர்வாகிகள் குமரேசன், ஒர்க் ஷாப் சரவணன், சந்தோஷ், ராமமூர்த்தி, கேபிள் மணி, முருகேஷ், செல்வம், சுசீந்திரன், இளங்கோ, சாமிநாதன், பரணி, அம்சவல்லி, சரண்யா, முத்துமாரி, மல்லிகா, கோகிலா, சுலோச்சனா மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Spread the love