சின்னக்காம்பட்டி பகுதியில் நாளை பிப்: 25 மின்தடை: ஒட்டன்சத்திரம் பிப்:திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா, சின்னக்காம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (25.2.2026) புதன்கிழமை நடக்கிறது. இதையொட்டி இடையகோட்டை, மார்க்கம்பட்டி, சின்னக்காம்பட்டி, கொ.கீரனூர், குத்திலிப்பை, சாமியாடிபுதூர், ஐ.வாடிப்பட்டி, நரசிங்கபுரம், கொங்கப்பட்டி, ஜவ்வாதுபட்டி, அண்ணாநகர், புல்லா கவுண்டனூர்,நவகானி, சோளியப்ப கவுண்டனூர், இ.அய்யம்பாளையம், நாரப்பநாயக்கன்பட்டி, அத்தப்பன்பட்டி, பாறைப்பட்டி, எல்லப்பட்டி, இடையன்வலசு, இ.கல்லுப்பட்டி, பெருமாள்கவுண்டன் வலசு, கக்கரநாயக்கனூர், வலையப்பட்டி,மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை ஒட்டன்சத்திரம் கிராமிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

More Stories
கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசு: 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கும் மலைவாழ் மக்கள்
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு.. DSP சண்முகசுந்தரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!
மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டி விபத்து… கால்களை இழந்த இளைஞர்கள்…