இராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் தகுதிக்கான புதுப்பிக்கப்படாத மற்றும் பதிவுச் சான்று புதுப்பிக்கப்படாத போக்குவரத்து அல்லாத வாகனங்கள் என மொத்தம் 9 வாகனங்கள் சிறைபிடிப்பு.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் நாமக்கல் வடக்கு அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் இராசிபுரத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு பதுவை நாதன் அவர்களின் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் திரு A.செல்வகுமார் அவர்கள் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டார்,
மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் ராசிபுரம் எல்லைக்குட்பட்ட பகுதியான வெண்ணந்தூர் பகுதியில் தகுதி சான்று புதுப்பிக்கப்படாத 4 டாட்டா ஏஸ் வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் மேல் நடவடிக்கைக்காக சிறை பிடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது,
மேலும் ராசிபுரம் பகுதிகளில் தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாத 4 டாட்டா ஏஸ் வாகனமும், பதிவுச் சான்று புதுப்பிக்கப்படாத ஒரு JCB வாகனமும் சிறைபிடிக்கப்பட்டு அலுவலக வளாகத்தில் மேல் நடவடிக்கைக்காக நிறுத்தப்பட்டுள்ளது.
இச்சிறப்பு வாகன தணிக்கையில் மொத்தம் 8 டாட்டா ஏஸ் வாகனங்களும், ஒரு பதிவு சான்று புதுப்பிக்கப்படாத ஒரு JCB வாகனம் என மொத்தம் 9 வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளது,
மேலும், இராசிபுரம் பகுதியில் அனுமதிக்குப் புறம்பாக அதிக பாரம் ஏற்றி சென்ற 4 சரக்கு வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசுக்கு வருவாயாக இணக்கக்கட்டணமாக 3 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று வாகன சிறப்பு தணிக்கை இராசிபுரம், மங்களபுரம், ஆயில் பட்டி, நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் போன்ற பகுதிகளில் அடிக்கடி நடைபெறும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு பதுவை நாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

More Stories
நாமக்கல்
பூந்தமல்லி–வடபழனி மெட்ரோக்கு பச்சை கொடி… குஷியில் சென்னை மக்கள்
வடகாடு ஊராட்சியில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி -க்கு பாராட்டு விழா.