March 3, 2026

தேனி மாவட்டம் வந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு.              தேனி. மார்ச், 2. தி.மு.க.வில் ஒ.பன்னீர்செல்வம் இனைந்த பிறகு நேற்று தேனி மாவட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது தேனி மாவட்ட தி.மு.க.சார்பில் சிறப்பான வரவேற்பை தி.மு.க.வினர் அளித்தார். தமிழக முதல்வரும், தி.மு.க.தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்பு சென்னை அறிவாளயத்தில் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் முன்னாள் எம்.பி. ஒ.ரவீந்திரநாத் உள்பட அவரது ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இனைந்தனர்.தி.மு.க.வில் இணைந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தேனி மாவட்ட எல்லையான ஆண்டிப்ட்டி கனவாய் பகுதியில் தி.மு.க.நிர்வாகிகள் தொண்டர்கள் சிறப்பானவரவேற்பு அளித்தனர். உடன் வந்த தங்கதமிழ்செல்வன் எம்.பி.க்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது. தேனியிலும் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். போடிநாயக்கனூர்                                   கட்டபொம்மன் சிலை அருகில்  ஓ பன்னீர்செல்வம் மற்றும் உடன் வந்தவர்களுக்கு போடிதி.மு.க. நகர செயலாளர் புருசோத்தமன். மற்றும் நிர்வாகிகள் ஏலக்காய் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Spread the love