உங்களை பார்க்கும் ஆசையில் வந்த புள்ள தான் ஜீப்பில் மோதில் இறந்துவிட்டது அண்ணே. பெண்களுக்கு உங்களின் வல்கர் வாரியர்ஸிடம் இருந்து தான் பாதுகாப்பு இல்லை என தெரிவித்துள்ளார் ஜூலி.
விக்னேஷ் மரணம்: மார்ச் 4ம் தேதி தஞ்சாவூரில் நடந்த தவெக கூட்டத்திற்கு வந்த விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து பலர் இரு சக்கர வாகனங்களில் வந்தார்கள். அப்படி வந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் விஜய்யின் வாகனத்தில் மட்டும் கவனம் வைத்துச் சென்றதால் சாலையோரம் நின்று கொண்டிருந்த போலீஸ் ஜீப்பை கவனிக்காமல் அதில் மோதிவிட்டார்.
இந்த விபத்தில் விக்னேஷின் தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். கல்லூரிக்கு சென்ற என் மகன் விஜய்யை பார்க்கப் போய் இப்படியாகிவிட்டதே என்று அவரின் தந்தை உருக்கமாக தெரிவித்தார். இந்நிலையில் சிகிச்சை பலனில்லாமல் விக்னேஷ் உயிரிழந்தார்.
இந்நிலையில் விஜய்யை விமர்சித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார் பிக் பாஸ் ஜூலி. ஐம்பது ஐம்பதாகவே இருக்கட்டும் 500 ஆக்கிவிடாதீர்கள் அண்ணே என்று நான் சொன்னதற்காக இந்த வல்கர் வாரியர்ஸ்(தவெகவின் விர்ச்சுவல் வாரியர்ஸ்களை தான் வல்கர் வாரியர்ஸ் என்கிறார் ஜூலி)கமெண்ட்ஸ் பகுதியில் பொங்கினாங்க. இன்று ஒரு புள்ள இறந்துவிட்டது. அதை வைத்து அரசியல் பேசக் கூடாது என்று நினைத்தாலும் மனது கேட்கவில்லை.
https://3585b393a87ec7507ca793242488a1c6.safeframe.googlesyndication.com/safeframe/1-0-45/html/container.html
அண்ணன் அண்ணன் என்று ஆசையாக உங்களை பார்க்க வந்து தானே அந்த புள்ள போலீஸ் ஜீப்பில் மோதி இறந்துவிட்டது. அந்த புள்ள இறந்ததால் பெற்றோருக்கு தானே நஷ்டம். உங்களுக்கு என்ன வந்துச்சுணே, நீங்க ஜாலியாக விசேஷங்களுக்கு சென்று ஜாலியா இருப்பீங்க(கல்பாத்தி சுரேஷ் மகனின் திருமண வரவேற்பு, மும்பையில் அட்லி மனைவி ப்ரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சிகளில் விஜய் கலந்து கொண்டதை சொல்கிறார் ஜூலி). நம் வீட்டிலா ஒருவர் இறந்தார், அதனால் நீங்க எல்லோரும் ஜாலியாக இருங்கள். ஐம்பந்தை ஐநூறாக்கிவிட்டுவிடாதீங்கனு மீண்டும் சொல்றேன் அண்ணே.
https://3585b393a87ec7507ca793242488a1c6.safeframe.googlesyndication.com/safeframe/1-0-45/html/container.html
அதுக்கு பேசினாயா, இதுக்கு பேசினாயா, இதுக்கு குரல் கொடுத்தியானு வந்துவிட வேண்டாம். எல்லாத்துக்கும் நாங்கள் பொறுப்பேற்கிறோம். 41 பேர் இறந்தபோது மீடியாவை பார்க்க பயந்து ஓடி ஒளியவில்லை. பெண்களுக்கு ஹராஸ்மென்ட், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைனு வேற. யாரிடம் இருந்து பாதுகாப்பு இல்லை என்று தெரியுமா?. உங்களின் வல்கர் வாரியர்ஸிடம் இருந்து தான் பாதுகாப்பு இல்லை. இரண்டு நிமிடம் கழித்து வந்து என் கமெண்ட்ஸ் செக்ஷனை பாருங்கள் எல்லாம் தெரியும் என்றார்.
ஜூலியின் வீடியோவை பார்த்த விஜய் ரசிகர்கள் அவரை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களோ இந்த தேர்தலில் இரண்டே பேருக்கு இடையே தான் போட்டியே. ஒன்னு விஜய்ணா, இன்னொன்னு ஜூலி. சபாஷ், சரியான போட்டி. உங்களிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் ஜூலி என தெரிவித்துள்ளனர்.
நிலைக்காது, ஹார்ட் பிரேக் தான்னு தெரிஞ்சும் கூட மீண்டும் மீண்டும்…: த்ரிஷா வெளியிட்ட வீடியோ பார்த்தீங்களா?பாஜக ஏ டீம்: முதல்வர் ஸ்டாலினை விமர்சிக்கும் விஜய் ஏன் பிரதமர் மோடியை பற்றி பேசவே மாட்டேன் என்கிறார் என்கிற விமர்சனம் உள்ளது. இந்நிலையில் மோடியை பற்றி பேசினால் அவர் சிபிஐ இடம் சொல்லி அவர்கள் வந்து அண்ணாவின் குடுமியை பிடித்து ஆட்டிவைத்துவிடுவார்கள். பாஜக வேறு தவெக வேறு இல்லை. இரண்டுமே ஒன்னு தான். பாஜகவின் ஏ டீம் தான் அண்ணன் என்று அண்மையில் வீடியோ வெளியிட்டிருந்தார் ஜூலி. இந்நிலையில் மீண்டும் விஜய் பற்றி அவர் வீடியோ வெளியிடவே, அண்ணனை வைத்து விளம்பரம் தேடுகிறார் என்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்ஜூலியை விஜய் ரசிகர்கள் விமர்சித்தாலும் மற்றவர்களோ, பிக் பாஸ் பிரபலம் மூலம் தனக்கு ஒரு போட்டி வரும் என்று அண்ணா நினைத்திருக்கவே மாட்டார் என்கிறார்கள். முன்பும் கூட நான் வீட்டில் இருப்பேன் இல்லைனா அலுவலகத்தில் இருப்பேன் அண்ணே என ஜூலி வெளியிட்ட வீடியோ வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories
ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு இரண்டே வார்த்தையில் பதில் சொன்ன லதா ரஜினி: என்ன வார்த்தை தெரியுமா?
நல்லகண்ணு உடல்நிலை பெரும் பின்னடைவு.. ராஜீவ் காந்தி மருத்துவமனை தகவல்!
பழனி அருகே முத்து நாயக்கன்பட்டியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ரேக்ளா மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார். அருகினில் பொதுக்குழு உறுப்பினர் மகுடீஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்