July 8, 2026

6 போட்​டி​யில் கோல் வாங்காமல் ஸ்பெயின் அணி சாதனை | FIFA WC 2026

நடப்பு உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் ஸ்பெயின் அணியின் தற்​காப்பு அரண் அசைக்க முடி​யாத கோட்​டை​யாக மாறி உள்​ளது. ஏனெனில் இது​வரை ஒரு கோல் கூட வாங்​காமல் ஸ்பெயின் தங்​களது ஆதிக்​கத்தை நிலைநிறுத்​தி​யுள்​ளது. இதன் வாயி​லாக உலகக் கோப்பை வரலாற்​றிலேயே முதன்​முறை​யாக, தொடர்ந்து 6 போட்​டிகளில் ஒரு கோல் கூட வாங்​காமல் உலக சாதனை படைத்​துள்​ளது ஸ்பெ​யின் அணி.

இதற்கு முன்​னர் உலகக் கோப்​பை​யில் தொடர்ந்து அதிக போட்டிகளில் கோல் வாங்​காத சாதனையை இத்​தாலி (1990-ம் ஆண்​டு), சுவிட்​சர்​லாந்து (2006, 2010) ஆகிய அணி​கள் தங்​கள் வசம் வைத்​திருந்​தன. இந்த இரு அணி​களும் தலா 5 போட்​டிகளில் கோல் வாங்​காமல் இருந்​தன. இதை தற்​போது முறியடித்து புதிய சாதனை படைத்​துள்​ளது ஸ்பெ​யின் அணி.

மேலும் அந்த அணி​யின் கோல்​கீப்​பர் உனாய் சிமோன், உலகக் கோப்​பை​யில் எதிரணி​களை கோல் அடிக்க விடா​மல் தடுத்து தனது சாதனையை 609 நிமிடங்​களாக நீட்​டித்து வரலாற்​று சாதனை படைத்​துள்​ளார்.

ஸ்பெயின் அணி​யின் இந்த இரும்​புக்​கோட்டை போன்ற தற்காப்புப் பயணம் கடந்த 2022-ம் உலகக் கோப்​பை​யின் நாக்​-அவுட் போட்​டியி​லிருந்து தொடங்​கியது. அப்​போது மொ​ராக்கோ அணிக்கு எதி​ராக 120 நிமிடங்​கள் போராடி​யும் ஸ்பெ​யின் ஒரு கோல் கூட வாங்​க​வில்​லை. ஆனால், பெனால்டி ஷூட்​-அவுட்​டில் மொராக்​கோ​விடம் தோற்று தொடரை விட்டு வெளி​யேறி இருந்தது.

Spread the love