
கொழும்பு: இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரர்களான ரேஹான் அகமது 24, பென் டக்கெட் 7 ரன்களில் நடையை கட்டினர். சீனியர் பேட்ஸ்மேனான ஜோ ரூட், ஜேக்கப் பெத்தேல் ஜோடி சீராக ரன்கள் சேர்த்து ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றது. தனது 5-வது அரைசதத்தை கடந்த ஜேக்கப் பெத்தேல் 72 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஜெப்ரே வான்டேர்சே பந்தில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஹாரி புரூக் அதிரடியாக விளையாடினார். தனது 3-வது சதத்தை விளாசிய ஹாரி புரூக் 66 பந்துகளில், 9 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 136 ரன்களும் பொறுமையாக விளையாடி தனது 20-வது சதத்தை கடந்த ஜோ ரூட் 108 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 111 ரன்களும் சேர்த்தனர். இதைத் தொடர்ந்து 358 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி 33 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்திருந்தது.

More Stories
தடுமாறும் சஞ்சு சாம்சனுக்கு பயிற்சியாளர் மோர்கல் ஆதரவு
All you need to know about penalty shootouts