சென்னை: தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுப்படி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மூன்றாயிரம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
அந்த கடைகளில் பணியாற்றியவர்களை அனைத்து மாவட்ட மற்றும் மண்டலங்களில் உள்ள நிர்வாக அலுவலகங்களில் பணியமர்த்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பை குறைத்து சிறப்புத் தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெறுவோருக்கு பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
மூடப்பட்ட கடை பணியாளர்கள் 500 பேருக்கு இளநிலை உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்நிலையில் இளைநிலை உதவியாளர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு 5 ஆண்டுகளில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
அதன்படி, நேற்று 200 இளைநிலை உதவியாளர்களுக்கு உதவியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும், டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகள் 7 பேருக்கு இளநிலை உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, புதிய அரசு அமைந்தபிறகு 717 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்தக் கடைகளில் பணியாற்றியவர்களை, தற்போது உருவாகியுள்ள 200 இளநிலை உதவியாளர்கள் காலிப்பணியிடங்களில் பணியமர்த்த வேண்டும் என டாஸ்மாக் பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

More Stories
பழநி பஞ்சாமிர்தம் மீண்டும் சட்டவிரோத விற்பனை: ஆன்லைனில் அதிக விலையால் பக்தர்கள் அதிர்ச்சி
நிதி ஆயோக், என்டிஏ கூட்டங்கள் புறக்கணிப்பு: டெல்லி செல்லாத புதுவை முதல்வர் ரங்கசாமி
“சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என முழங்கியவர்” – பாரதிராஜாவுக்கு திருமாவளவன் புகழஞ்சலி