May 31, 2026

717 மதுக்கடைகளும் மூடப்படவில்லை: அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: பாமக தலை​வர் அன்​புமணி நேற்று வெளி​யிட்ட அறிக்​கையில் கூறியுள்ளதாவது: முதல்​வர் விஜய் 717 மதுக்கடைகளை மூட உத்​தரவிட்டிருந்த நிலையில், பெரும்​பான்​மை​யான கடைகள் மூடப்​பட​வில்லை என்று செய்​தி​கள் வெளி​யாகி​யுள்​ளன. இது உண்​மை​யாக இருந்​தால், இந்த விஷ​யத்​தில் அரசின் நடவடிக்​கைகள் மிகுந்த ஏமாற்​றமளிப்பதாக உள்ளன.

எனவே, எத்​தனை மதுக்​கடைகள் கடந்த 26-ம் தேதிக்​குள் மூடப்​பட்டன என்​பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்​டும். அவற்​றில் இது​வரை மூடப்​ப​டாத மதுக்​கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவை அனைத்​துக்​கும் மேலாக இப்​போது மூடப்​படும் 717 மதுக்​கடைகளும் வேறு இடங்​களில் திறக்​கப்​ப​டா​மல் இருப்​பதை அரசு உறு​தி​செய்ய வேண்​டும் என்று அவர் தெரி​வித்​துள்​ளார்​.

Spread the love