May 6, 2026

இறுதி மூச்சு வரை சினிமா… ஆர் பி சௌத்ரியின் அசராத பயணம்! | R B Choudary | Super Good Films

பல பாரம்பரிய சினிமா தயாரிப்பு நிறுவனங்களே சினிமா தயாரிப்பை நிறுத்தி வரும் நிலையில் 100வது படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரிக்க வேண்டும் என மிகுந்த கனவுகளுடன் திட்டமிட்டு வந்தார்.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான ஆர்.பி. சௌத்ரி சாலை விபத்தில் உயிரிழந்தது துறைக்கு பேரிழப்பாகும். ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட அவர், நகை மற்றும் இரும்பு தொழிலில் இருந்து 1988ல் ‘ஆதி பாவம்’ மூலம் தயாரிப்பாளராக மாறி, ‘புது வசந்தம்’ முதல் ‘நாட்டாமை’, ‘பூவே உனக்காக’, ‘திருப்பாச்சி’ வரை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மூலம் எண்ணற்ற ஹிட் படங்களை வழங்கினார்.

தமிழ் சினிமாவின் முதன்மை தயாரிப்பாளர்களில் ஒருவர் ஆர் பி சௌத்ரி, அதிர்ச்சிகரமான சாலை விபத்தில் பலியாகி இருக்கிறார். அவரது இழப்பு தமிழ் சினிமாவுக்கு பேரிடி. தமிழ் சினிமாவில் 38 வருடம் இவரது பங்களிப்பு மிகப்பெரியது. ரத்தன்லால் பகத் சௌத்ரி (எ) ஆர் பி சௌத்ரி ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்டவர். நகை, இரும்பு உற்பத்தி, ஏற்றுமதி போன்ற துறைகளில் பணியாற்றி வந்தவர், 1988ல் மலையாள படமான `ஆதி பாவம்’ படத்தை தயாரித்ததன் மூலம் சினிமா தயாரிப்பாளராக மாறினார். தொடர்ந்து `லயனம்’, `கல்பனா ஹவுஸ்’ போன்ற படங்களை தயாரித்தார். தமிழில் இயக்குநர் விக்ரமனின் அறிமுகப்படமான `புது வசந்தம்’ மூலம் தயாரிப்பாளராக கால் பதித்தார். படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் பெயர் பிரபலமானது.

Super Good Films

Super Good Films

Spread the love