புதுடெல்லி: மேற்கு வங்க முதல் கட்ட தேர்தலில் 92 சதவீத வாக்குகள் பதிவானது மகிழ்ச்சி அளிக்கிறது என உச்ச நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் நடத்தப்படும் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு எதிராக தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கல்யாண் பானர்ஜி கூறும்போது, ‘‘மேற்குவங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 92 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் பெருமளவில் வாக்களித்துள்ளனர்.
இருப்பினும் எஸ்ஐஆரின் போது பெயர் நீக்கம் செய்யப்பட்ட 27 லட்சம் பேரின் மேல்முறையீடு மனுக்களில் 136 மனுக்கள் மட்டுமே தீர்ப்பாயத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று வாதிட்டார்.
அப்போது, இந்திய குடிமகனாக மேற்கு வங்கத்தில் பதிவான வாக்கு சதவீதத்தை கேட்டு மகிழ்ச்சி அடைவதாகவும், மக்கள் வாக்குரிமையை செலுத்தும் போதுதான் ஜனநாயக கட்டமைப்பு வலுப்படுவதாகவும் தலைமை நீதிபதி சூர்ய காந்த் பெருமிதம் தெரிவித்தார். வன்முறையற்ற தேர்தலாக இருந்தது என மற்றொரு நீதிபதி ஜோய்மால்யா பாக்சி குறிப்பிட்டார்.
கூடுதல் அவகாசம்: மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை நாடவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். மால்டாவில் மாவட்ட நீதிபதிகளை சிறைப்பிடித்த விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அந்த விவகாரத்தை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு கூடுதல் அவகாசம் அளித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

More Stories
இந்து கடவுள்களை அவமதிப்பதா? – பிரகாஷ்ராஜ் மீது ரூ.100 கோடிக்கு மான நஷ்டஈடு வழக்கு
மேற்கு வங்க தேர்தலில் பாஜக வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெறும்: பிரதமர் மோடி நம்பிக்கை
இந்திய வான்வெளியில் பறப்பதற்கு பாகிஸ்தான் விமானங்களுக்கு மே 24 வரை தடை நீட்டிப்பு