பிரபல இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடத்தில் பல படங்களை இயக்கி இருக்கிறார்.
தமிழில் ராஜபார்வை, பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், மும்பை எக்ஸ்பிரஸ் உள்பட சில படங்களை இயக்கியுள்ளார். இவருக்கு நடிகர் கமல்ஹாசன், ‘அபூர்வ சிங்கீதம்’ என்கிற பெயரில் ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சியை சில வருடங்களுக்கு முன் நடத்தினார். இந்நிலையில், சிங்கீதம் சீனிவாச ராவ் தனது 61-வது திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.
அதை தயாரிக்க இருப்பதாக பிரபல தெலுங்கு திரைப்பட நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் அறிவித்துள்ளது. இதன் தொடக்கவிழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இது, இளம் தலைமுறையின் காதலைப் பேசும் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சிங்கீதம் சீனிவாச ராவ் 94-வது வயதில் திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories
தமிழகத்தில் பிப்.10 வரை வறண்ட வானிலை; சில மாவட்டங்களில் பனிமூட்டம்
தமிழகம் வரும் பிரதமர் அறுபடை வீடுகளையும் சுற்றிப் பார்க்க வேண்டும்: அமைச்சர் சேகர்பாபு
‘குடமுழுக்கில் யாருக்கும் முதல் மரியாதை இல்லை’ – உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு