புதுடெல்லி: செக் குடியரசில் நடைபெற்று வரும் 56-வது கிராண்ட்ப்ரீ உஸ்தி நாட் லாபேம் (ஐரோப்பிய குத்துச்சண்டை) போட்டியில் இந்தியா 12 பதக்கங்களை அள்ளியுள்ளது.
இந்தப் போட்டியில் இந்தியா 8 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலத்தைக் கைப்பற்றியுள்ளது. இந்திய வீராங்கனைகள் லோவ்லினா போர்கோஹெயின் (75 கிலோ), பிரீத்தி பவார் (54 கிலோ), சாக்சி (51 கிலோ), பிரியா (60 கிலோ) ஆகியோர் தங்கமும், பர்வீண் 65 கிலோ பிரிவில் வெள்ளியும் வென்றனர்.
ஆடவர் பிரிவில் ஜாதுமணி சிங் மாண்டெங்பம்(55 கிலோ), சச்சின் (60 கிலோ), அங்குஷ் (80 கிலோ), நரேந்தர் (+90 கிலோ) ஆகியோர் தங்கம் வென்றனர். ஆதித்ய பிரதாப் யாதவ் (65 கிலோ), கபில் போகரியா (90 கிலோ) வெள்ளி வென்றனர். சுமித் குந்து (70 கிலோ) வெண்கலத்தைக் கைப்பற்றினார்.

More Stories
“ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும் என்ற வெறி இருக்கிறது” – ஸ்டீபன் பிளெமிங் மனம் திறப்பு
செஸ் ஒலிம்பியாட் 2-வது சுற்றில் இந்திய அணிகள் வெற்றி
சச்சின், திராவிட், கங்குலியின் நிபுணத்துவத்தை பயன்படுத்த பிசிசிஐ-க்கு கவாஸ்கர் கோரிக்கை