June 22, 2026

7 வயதில் கோடிங்… 16 வயதில் ரூ.100 கோடி AI நிறுவனம்… – இந்தியாவின் பிராஞ்சலி சாதனை

கடந்த 2022-ம் ஆண்டு, தொழில்நுட்ப உலகம் ஒரு புதிய புரட்சிக்குத் தயாராகிக் கொண்டிருந்த நேரம். உலகமே செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை நோக்கித் திரும்பியிருந்த வேளையில், 16 வயது சிறுமி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவர்தான் பிராஞ்சலி அவஸ்தி.

இன்று அவருக்கு 19 வயதாகிறது. தனது 16 வயதிலேயே, சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான ஒரு வெற்றிகரமான ஏஐ ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை உருவாக்கி, அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) உலகையே வியக்க வைத்துள்ளார். 7 வயதில் கோடிங் கற்கத் தொடங்கி, இன்று ஒரு அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிறுவனத்தை வழிநடத்தும் அவரது பயணம், இளம் சாதனையாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய உத்வேகமாகும்.

யார் இந்த பிராஞ்சலி அவஸ்தி? – இந்​தி​யா​வில் பிறந்த பிராஞ்​சலி, சிறு வயதிலேயே தனது குடும்​பத்​துடன் அமெரிக்​கா​வின் புளோரிடா மாகாணத்​துக்​குக் குடிபெயர்ந்​தார். ஒரு பொறி​யாள​ரான அவரது தந்​தையே அவருக்கு முதல் வழி​காட்​டி​யாக இருந்​தார். தந்​தை​யின் தூண்​டு​தலால், பிராஞ்​சலி தனது 7-வது வயதிலேயே கோடிங் (Coding) கற்​கத் தொடங்​கி​னார். நாளடை​வில், அவருக்​குச் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) மற்​றும் மெஷின் லேர்​னிங் (Machine Learning) துறை​களில் அலாதி ஆர்​வம் ஏற்​பட்​டது.

சமூக ஊடக​மான எக்ஸ் தளத்​தில் வெளி​யான தகவலின்​படி, பிராஞ்​சலிக்கு 13 வயது இருக்​கும்​போதே, தனது பள்​ளிப் படிப்​புக்கு நடுவே ஒரு முக்​கிய ஆராய்ச்சி ஆய்​வகத்​தில் இன்​டர்ன்​ஷிப் (Research Internship) செய்​யும் வாய்ப்​பைப் பெற்​றார். அங்கு அவர் மெஷின் லேர்​னிங் திட்​டங்​களில் நேரடி​யாகப் பணி​யாற்​றி​னார். அந்த அனுபவத்​தின் போது​தான், ஆராய்ச்​சி​யாளர்​கள் இணை​யத்​தில் உள்ள கொட்​டிக்​கிடக்​கும் கோடிக்​கணக்​கான தரவு​களி​லிருந்து தங்​களுக்​குத் தேவை​யான சரி​யான தகவல்​களைத் தேடி எடுப்​ப​தற்கு எவ்​வளவு சிரமப்​படு​கிறார்​கள் என்​பதை அவர் நேரில் கண்​டறிந்​தார்.

16 வயதில் `டெல்வ்.ஏஐ’ தொடக்கம்: ஆ​ராய்ச்​சி​யாளர்​களின் இந்​தத் துயரத்​துக்கு ஒரு முற்​றுப்​புள்ளி வைக்க நினைத்த பிராஞ்​சலி, ஜனவரி 2022-ல் `Delv.AI’ என்ற தளத்​தைத் தொடங்​கி​னார். ஆராய்ச்​சி​யாளர்​கள் இணை​யத்​திலிருந்து தங்​களுக்​குத் தேவை​யான பயனுள்ள தகவல்​களை மிக எளி​தாக​வும், விரை​வாக​ தேட​வும், ஒழுங்​கமைக்​க​வும், சுருக்கி எடுக்​க​வும் உதவும் வகை​யில் இந்த தளம் வடிவ​மைக்​கப்​பட்​டது.

அவரது இந்த ஸ்டார்ட்​-அப் யோசனை மிக விரை​வில் அங்​கீ​காரம் பெற்​றது. மியாமியை தளமாகக் கொண்ட ஒரு முக்​கிய ஸ்டார்ட்​-அப் அக்​சிளரேட்​டர் திட்​டத்​தில் இணை​யும் வாய்ப்பு அவருக்​குக் கிடைத்​தது. இந்த வாய்ப்பு பிராஞ்​சலிக்​குச் சிறந்த வழி​காட்​டிகளை​யும், பெரிய முதலீட்​டாளர்​களை​யும் அடை​யாளம் காட்​டியது. இதன் விளை​வாக, On Deck மற்​றும் Village Global போன்ற முன்​னணி முதலீட்​டாளர்​களிட​மிருந்து சுமார் 4,50,000 டாலர் (சு​மார் ரூ.3.7 கோடி) நிதி​யுத​வியைப் பெற்​றார்.

ரூ.100 கோடி மதிப்​புள்ள நிறு​வனம்: அதன் பிறகு நிறு​வனத்​தின் வளர்ச்சி அசுர வேகத்​தில் இருந்​தது. மிகக் குறுகிய காலத்​தில் இந்​தத் தளம் பெற்ற பேராதரவு மற்​றும் வளர்ச்​சி​யின் காரண​மாக, பிராஞ்​சலி​யின் ‘Delv.AI’ நிறு​வனத்​தின் மதிப்பு தற்​போது சுமார் ரூ.100 கோடியை எட்​டி​யுள்​ளது. இதன் மூலம், மிக இளம் வயதிலேயே இவ்​வளவு பெரிய வெற்​றிகர​மான ஏஐ நிறு​வனத்தை உரு​வாக்​கிய இளம் நிறு​வனர்​களில் ஒரு​வ​ராக பிராஞ்​சலி அவஸ்தி உரு​வெடுத்​துள்​ளார்.

இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த தொழில்​முனை​வோ​ரான பிராஞ்​சலி அவஸ்​தி, அமெரிக்​கா​வின் புகழ்​பெற்ற ஜார்​ஜியா இன்​ஸ்​டிடியூட் ஆஃப் டெக்​னாலஜி​யில் கணினி அறி​வியல் பயின்​றார். மெஷின் லேர்​னிங் மற்​றும் கோடிங் மீது தனக்​கிருந்த தீராத ஆர்​வத்​தை, தனது 16 வயதிலேயே ஒரு பிரம்​மாண்​ட​மான வணிக வெற்​றி​யாக மாற்​றிக் காட்​டி​யுள்​ளார். வயது என்​பது வெறும் எண்​தான், திறமை​யும் சரி​யான இலக்​கும் இருந்​தால் எந்த வயதி​லும் உலகை மாற்​றும் சாதனையைப் படைக்​கலாம் என்​ப​தற்​கு பிராஞ்​சலி​யின்​ கதையே ஆகச்​சிறந்​த ​சான்​று!

Spread the love