சென்னை: ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள சமா தான் சாமரோஹ் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்க ஜூலை 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு மத்தியஸ்தம் மூலம் தீர்வு காணுதல் மற்றும் தகராறுகளை இணக்கமாக தீர்த்தலுக்காக உச்சநீதிமன்றம் ‘சமாதான் சமாரோஹ்’ திட்டத்தின் ஒரு பகுதியாக சிறப்பு மக்கள் நீதிமன்றங்களை நாடு முழுவதும் கடந்த ஏப்.21-ம் தேதி முதல் நடத்தி வருகிறது. ‘பங்கேற்பு நீதி’ மற்றும் ‘நீதியை மக்களின் இருப்பிடத்துக்கே கொண்டு சேர்த்தல்’ ஆகிய வற்றை மையமாகக் கொண்டு இந்த முன்னெடுப்பு செயல்படுத்தப் படுகிறது.
இந்த சமாதான் சமாரோஹ் ஆகஸ்ட் 21, 22 மற்றும் 23ம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு மக்கள் நீதிமன்றத்துடன் நிறைவடைகிறது. எனவே, அனைத்து வழக்கறிஞர்களும், வழக்காடிகள் மற்றும் வழக்கு தொடர்புடைய அனைத்து தரப்பினரும் இந்த முன்னெடுப்பின் கீழ் தகராறுகளை திறம்பட தீர்ப்பதில் பங் கேற்று தங்களது பங்களிப்பை அளிக்கு மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வழக்கு தரப்பினர் நேரடியாகவோ அல்லது காணொலி மூலமாகவோ ஆஜராகி பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளலாம்.
சம்பந்தப்பட்ட தரப்பினர் மற்றும் அவர் https://forms.gle/jqxefqF4BCWzukoP6 என்ற இணைப்பில் படிவத்தை பூர்த்தி செய்து வரும் ஜுலை 31ம் தேதிக்குள் தங்களது கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு சமாதான் சமாரோஹ் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் பொறுப்பாளர் (011 – 2311 2428 ), ஒருங்கிணைந்த சேவை மையம் (011 – 2311 6464 ), இயக்குநர் (011 – 2311 5652 ) அல்லது speciallokadalat 2026@sci.nic.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More Stories
சாதிச் சான்றிதழ், தாட்கோ கடன் சிக்கல்களுக்கு தீர்வு காண அமைச்சர் வன்னியரசிடம் பழங்குடியின அமைப்புகள் கோரிக்கை
“தமிழகத்தை அரசியல் பேரிடர் காலத்தில் இருந்து திமுக நிச்சயம் மீட்கும்” – உதயநிதி ஸ்டாலின்
“முருகப் பெருமான் வடநாட்டில் பிறந்தார் என கட்டுக்கதை” – ஜூனியர் என்டிஆர் படத்துக்கு சீமான் எச்சரிக்கை