July 7, 2026

தங்கம் விலை இரண்டு நாட்களில் பவுனுக்கு ரூ.2400 குறைவு

சென்னை: இந்த வாரத்தின் 2-வது நாளான இன்றும் (ஜூலை 7) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. நேற்று பவுனுக்கு ரூ.1,120 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,08,480-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று பவுனுக்கு மேலும் ரூ.1,280 குறைந்துள்ளது.

அந்தவகையில் தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களில் பவுனுக்கு ரூ.2400 குறைந்துள்ளது. இது நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

கடந்த மே மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,280 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,07,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.160 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,400-க்கு விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. சென்னையில் வெள்ளி ஒரு கிலோ ரூ.2,50,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Spread the love