ஒட்டன்சத்திரம் ஜூலை-8
ஒட்டன்சத்திரம் பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியில் பேருந்துகள் அதிவேகமாக வந்து செல்வதால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் தினமும் அச்சத்துடனும் சிரமத்துடனும் சாலையை கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, பேருந்து நிலையத்திற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் பேருந்துகள் வேகத்தை குறைக்காமல் இயக்கப்படுவதால் விபத்து அபாயம் அதிகரிக்கும் சூழல் உள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, ஒட்டன்சத்திரம் பேருந்து நிலைய மேற்கு மற்றும் கிழக்கு நுழைவாயில் முன்பாக உடனடியாக வேகத்தடை அமைத்து, எச்சரிக்கை பலகைகளையும் நிறுவி, பேருந்துகள் கட்டுப்படுத்தப்பட்ட வேகத்தில் இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

More Stories
தேமுதிக சார்பில் கொடியேற்று விழா
பழனிக்கு பெங்களூரில் இருந்து ஆம்னி பஸ்ஸில் 17 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல்மூன்று பேர் கைது
பழனியில் உறங்காப் புளியான் கோவிலில் திருவிளக்கு பூஜை, ரவி மனோகரன் எம்எல்ஏ பங்கேற்பு