July 8, 2026

தொடர்ந்து 3-வது நாளாக குறைந்த தங்கம் விலை – இன்றைய நிலவரம்

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்றுடன் (ஜூலை 8) தொடர்ந்து 3-வது நாளாகக் குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்துள்ளது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

கடந்த மே மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலை ஜூலை பிறந்ததில் இருந்து சில நாட்கள் உயர்ந்த நிலையில் ஜூலை 4, 5 தேதிகளில் மாற்றமின்றி விற்பனையானது.

இந்நிலையில் ஜூலை 6, 7 என வாரத்தின் முதல் இரண்டு தினங்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு  ரூ.2400 குறைந்தது. தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.13,330-க்கும், பவுனுக்கு ரூ.560 குறைந்து ஒரு பவுன் ரூ.1,06,640-க்கும் விற்பனையாகிறது. இது நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.11,150-க்கும், 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.76 குறைந்து ஒரு கிராம் ரூ.14,542-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை, இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.245-க்கும்,கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனையாகிறது.

Spread the love