புதுடெல்லி: இந்தியக் குடிமக்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலர் வெளிநாட்டு மருத்துவப் பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ் படிக்கின்றனர்.
அங்கு பட்டம் பெற்ற பிறகு, இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவராகப் பணிபுரிய வேண்டும் என்றால், ‘எஃப்.எம்.ஜி.இ’ எனப்படும் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான தகுதித் தேர்வை எழுத வேண்டும். தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் நடத்தும் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இந்தியாவில் மருத்துவப் பயிற்சி மேற்கொள்வதற்கான உரிமம் வழங்கப்படும்.
இந்நிலையில், கடந்த ஜூன் 28-ம் தேதி நாடு முழுவதும் இந்த ஆண்டுக்கான எஃப்.எம்.ஜி.இ தேர்வு நடைபெற்றது. இதற்கான முடிவுகளைத் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் நேற்றுமுன்தினம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இத்தேர்வை நாடு முழுவதிலுமிருந்து மொத்தம் 37,448 மருத்துவப் பட்டதாரிகள் எழுதியிருந்தனர். ஆனால், அவர்களில் வெறும் 4,635 பேர் மட்டுமே (12.38%) தகுதி பெற்றுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் நடந்த 6 தேர்வுகளில் இதுதான் மிகக் குறைந்த தேர்ச்சி விகிதம் என்று வாரியம் தெரிவித்துள்ளது.

More Stories
ரூ.10 லட்சமாக உயர வாய்ப்பு – ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டமும், சில முக்கிய தகவல்களும்
புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை பாதுகாப்பு பணியில் 12,000 போலீஸ்
பெங்களூருவில் உலக திருக்குறள் மாநாடு கோலாகலம்: தேசிய நூலாக அறிவிக்கக் கோரி தீர்மானம்