திருவனந்தபுரம்: ரூ.30 கோடி முதல் பரிசு கொண்ட ஓணம் பம்பர் லாட்டரியை கேரள முதல்வர் வி.டி.சதீசன் நேற்று தொடங்கி வைத்தார்.
இது குறித்து முதல்வர் வி.டி.சதீசன் தனது முகநூல் பதிவில், “லாட்டரி வரலாற்றில் மிக அதிக முதல் பரிசு இதுவாகும். இந்த லாட்டரி சீட்டுகள் ஜூலை 20 முதல் விற்பனைக்கு கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ.25 கோடி வழங்கப்பட்டது. இது இந்த ஆண்டு ரூ.30 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பரிசாக 20 பேருக்கு தலா ரூ.1 கோடியும் வழங்கப்பட உள்ளது. லாட்டரி சீட்டின் விலை ரூ.500 செப்டம்பர் 26ல் குலுக்கல் நடைபெறும்.

More Stories
தாய் குணமடைந்ததால் 12 ஜோதிர்லிங்கங்களுக்கு ஓடிச் சென்று நேர்த்திக்கடன் – இதுவரை 8,000 கி.மீ கடந்த பிஹார் இளைஞர்!
உ.பி. தேர்தலில் போட்டியிடத் தயாராகும் அரசியல் வாரிசுகள்
டெல்லி போராட்டம் தொடர்பான வழக்குகள்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை