July 25, 2026

ஈரோடு

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஈரோடு மனித நேய மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் கருங்கல்பாளையம் காந்தி சிலை முன்பாக கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு மனிநேய மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் சித்தீக் தலைமை தாங்கினார்.தலைமைக் கழக பேச்சாளர் கோவை செய்யது கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார் நிகழ்ச்சியில் மமக, மாவட்ட செயலாளர் சலீம், தமுமுக, மாவட்ட செயலாளர் லரீஃப் இளைஞரணி ஜீலானிகெளஸ், ரிஸ்வான், சாகுல் அமீர், மாணவரணி செயலாளர் முபாரக் சலீம்,ஜாகிர்உசேன்,சிக்கந்தர்,இஸ்மாயில் சுல்தான் அலாவுதீன் கலந்து கொண்டனர்.

Spread the love