July 25, 2026

ஒட்டன்சத்திரத்தில்வி.சி.க வணிகர் அணி மண்டல செயற்குழு கூட்டம்,

ஒட்டன்சத்திரம் ஜூலை-25

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் மஹாலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வணிகரணி மண்டல செயற்குழு கூட்டம் மாநில செயலாளர் பொன்வளவன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக வி.சி.க வணிகரணி முதன்மை செயலாளர் செல்லத்துரை, மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், மாநில செயலாளர்கள் செங்கதிர்வளவன், தொண்டைமான் ஆகியோர் கலந்துகொண்டு வருகின்ற ஆகத்து 17-ம் தேதி உளுந்தூர்பேட்டையில் நடைபெற உள்ள தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டிற்கு வணிகரணி சார்பில் ஏராளமான வாகனங்களில் கலந்துகொள்வது சம்மந்தமாக பேசப்பட்டது. இக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் கனியமுதன், மாவட்ட செயலாளர் கணபதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். 

இதில் வி.சி.க பூக்கடை செந்தில், மாவட்ட செயலாளர் (இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை) சு.வடிவேல், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜவளவன், பூக்கடை ந.வேலுச்சாமி, மாவட்ட செய்தித்தொடர்பாளர் கந்தசாமி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் அடங்கிய மண்டல,  மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.

Spread the love