July 25, 2026

ஒட்டன்சத்திரத்தில் தூய்மை பணியாளர்களுக்கு அரசு சேவைகள் – நலத்திட்ட முகாம்.

ஒட்டன்சத்திரம், ஜூலை 25:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில், தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட முகாம் நடைபெற்றது.

நகராட்சி ஆணையர் ஸ்வேதா தலைமையில் நடைபெற்ற முகாமை, நகர்மன்றத் தலைவர் க. திருமலைசாமி, துணைத் தலைவர் ப. வெள்ளைச்சாமி, நகராட்சி பொறியாளர் சுப்பிரமணிய பிரபு, வட்டாட்சியர் சண்முகம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

முகாமில் மாற்றுத்திறனாளிகள் துறை, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை, டிஜிட்டல் சேவைகள், நிதித்துறைஉள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் மூலம் சேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு சேவைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் கார்த்திக்ராஜன், தாட்கோ மேலாளர் செல்வக்குமார், துணை வட்டாட்சியர் அன்சாரி, வருவாய் ஆய்வாளர் பூர்ணிமா, கிராம நிர்வாக அலுவலர் ஹரிகிருஷ்ணன், வட்டார சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் வீரப்பன்காமராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் திரளாக பங்கேற்றனர்.

Spread the love