நாராயணா ஹெல்த் சிட்டியின் எலும்பியல் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் ஜெர்மனியில் சிறப்பாக தயாரிக்கப்பட்டு சிறுமியின் எதிர்கால உடல் வளர்ச்சிக்கு ஏற்ப விரிவடையும் தன்மை கொண்ட அறுவை சிகிச்சையின்றி நீளத்தை அதிகரிக்கக்கூடிய (Non-invasive Expandable tumour prosthesis) தனிப்பயனாக்கப்பட்ட கட்டி மாற்று செயற்கை மூட்டை வெற்றிகரமாக பொருத்தினர். அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் அந்தச் சிறுமி முழுமையாக நலமுடன் உள்ளார். அவரது கால் வெற்றிகரமாக பாதுகாக்கப்பட்டுள்ளது. தசை-எலும்பு (Musculoskeletal) தொடர்பான பல்வேறு நோய்கள் மற்றும் பாதிப்புகளுக்கு அதிநவீன தொழில்நுட்பம், பல்துறை மருத்துவ நிபுணர்களின் ஒருங்கிணைந்த சிகிச்சை அணுகுமுறை மற்றும் நோயாளியை மையமாகக் கொண்ட சிகிச்சை முறைகள் மூலம் உயர்தர மருத்துவ சேவைகளை வழங்குவதில் பெங்களூர் நாராயணா ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் சாதனையாகும்.
ஜூலை 26, ஈரோடு: பெங்களூரு நாராயணா ஹெல்த் சிட்டி ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, எலும்பியல் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு ஈரோட்டில் நடைபெற்றது. 7 வயது சிறுமிக்கு முழங்கால் பகுதியில் வீக்கம் மற்றும் வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் பெங்களூரு நாராயணா ஹெல்த் சிட்டியில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் எலும்புத் தொற்று எனக் கருதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இங்கு திசு பரிசோதனை செய்ததில் (Tissue Analysis), தீவிர தன்மை கொண்ட எலும்புப் புற்றுநோய் Osteosarcoma இருப்பது உறுதி செய்யப்பட்டது. கீமோதெரபி சிகிச்சையில் சிறப்பான முன்னேற்றம் கண்டதைத் தொடர்ந்து, புற்றுநோய்க் கட்டியை முழுமையாக அகற்றியதோடு, எதிர்காலத்தில் கால் இயல்பான செயல்பாட்டையும் பாதுகாக்கும் வகையில் அந்தச் சிறுமிக்கு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.
Oplus_16908288

More Stories
ராசிபுரம் அருகே வீட்டின் அருகே புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு – தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்பு…
கரூர்
கரூர் மாவட்டம்