July 30, 2026

இராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் தனியார் மஹாலில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கில் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு, மக்களின் கருத்துகளை அரசிடம் கொண்டு செல்லும் பாலமாகவும் ஊடகங்கள் செயல்படுகின்றன என்றும் போலிச் செய்திகளைத் தடுக்கவும், போதை இல்லா தமிழ்நாடு உருவாக்கவும் ஊடகங்களின் பங்கு அவசியம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எம். சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ் பேசுகையில், போதைப்பொருள் ஒழிப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஊடகங்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநர் (பொறுப்பு) வி. பழனிச்சாமி, செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் போலிச் செய்திகள் அதிகரித்து வருவதால், ஊடகவியலாளர்கள் தகவல்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்து தொழில்முறை அறநெறிகளைப் பின்பற்ற வேண்டும் என்றார்.

பயிலரங்கில் போலிச் செய்திகளை அடையாளம் காணுதல், டிஜிட்டல் தகவல்களை சரிபார்த்தல், ஊடகங்களின் சமூகப் பொறுப்பு உள்ளிட்ட தலைப்புகளில் விளக்கமளிக்கப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பங்கேற்றனர்.

Spread the love