அனுப்பர்பாளையம், ஜூலை.29
திருப்பூர் மாநகர காவல்துறை மற்றும், பெம் ஸ்கூல் ஆஃப் எக்ஸ்லென்ஸ் பள்ளி ஆகியவை சார்பில், போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் இன்று காலை நடந்தது.அங்கேரிபாளையம் ரோடு ஜீவா காலனியில் உள்ள தொழிலாளர் திருமணமண்டபத்தில் தொடங்கிய ஊர்வலத்தை திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் ரமேஷ் கிருஷ்ணா கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில், உதவி ஆணையர் பிரதீப்குமார், அனுப்பர்பாளையம் இன்ஸ்பெக்டர் விஜயா, பெம் ஸ்கூல் முதல்வர் விஜய்கார்த்திக், ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஊர்வலம் ஜீவா காலனியில் இருந்து பத்மாவதிபுரம் அரசு மேல் நிலைப்பள்ளி ,ஏ.வி.பி முதல் வீதி வழியாக, திருப்பூர் சர்வோதயா சங்கம் வரை நடந்தது. பின்னர் சர்வோதயா சங்கத்தில் இருக்கும் மகாத்மாகாந்தியின்அஸ்தி வைத்துள்ள மண்டபத்தின் முன் அஞ்சலி செலுத்தி, போதைக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை மாணவர்கள் ஏற்றனர்.

More Stories
29-07-2026
இராமநாதபுரம்மாவட்டம்
இராமநாதபுரம்