July 30, 2026

பிரதமர் மோடியின் வீடியோ பேஸ்புக்கில் நீக்கப்பட்டது தொடர்பாக ‘மெட்டா’வுக்கு மத்திய அரசு சம்மன்.

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி​யின் வீடியோ பேஸ்புக்​கில் இருந்து நீக்​கப்​பட்​டது தொடர்​பாக மெட்டா நிறு​வனத்​துக்கு மத்திய அரசு சம்​மன் அனுப்பி உள்​ளது.

நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரம் தொடர்​பாக டெல்லி ஜந்​தர் மந்தரில் இளைஞர்​கள் தொடர் போராட்​டம் நடத்​தினர். இது தொடர்​பாக கடந்த 23-ம் தேதி நள்​ளிர​வில் பிரதமர் நரேந்​திர மோடி வெளியிட்ட செல்ஃபி வீடியோவில், “வி​னாத்​தாள் கசிவு வழக்​கு​களை விசா​ரிக்க விரைவு நீதி​மன்​றங்​கள் அமைக்​கப்​படும். நாடாளு​மன்​றத்​தில் புதிய மசோதா விரை​வில் நிறைவேற்றப்படும்” என்று உறுதி அளித்​தார்.

இந்த வீடியோ அனைத்து சமூக வலை​தளங்​களி​லும் வைரலாக பரவி வரு​கிறது. இதனிடையே நேற்று காலை பேஸ்​புக் சமூக வலை​தளத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி​யின் வீடியோ திடீரென நீக்​கப்​பட்​டது. இதுதொடர்​பாக மத்​திய மின்​னணு மற்​றும் தகவல் தொடர்​புத் துறை சார்​பில் பேஸ்​புக்​கின் தாய் நிறு​வன​மான மெட்டாவுக்கு சம்​மன் அனுப்​பப்​பட்டு உள்​ளது.

மெட்​டா​வின் சர்​வ​தேச விவ​கார தலை​வர் ஜோயல் கப்​லான் மற்றும் இன்​ஸ்​டாகி​ராம் தலை​வர் ஆடம் மொசேரிக்கு சம்​மன் அனுப்​பப்​பட்டு இருப்​ப​தாக மத்​திய அரசு வட்​டாரங்​கள் தெரிவித்துள்​ளன. இதுகுறித்து மெட்டா நிறுவன செய்​தித் தொடர்பாளர் ஒரு​வர் கூறும்​போது, “தொழில்​நுட்பக் கோளாறு காரண​மாக பிரதமர் மோடி​யின் வீடியோ தவறு​தலாக நீக்கப்பட்டது. அந்த வீடியோ மீண்​டும் பதிவேற்​றம் செய்​யப்​பட்டு உள்​ளது. தெரி​யாமல் நடந்த தவறுக்​காக மன்​னிப்பு கோருகிறோம்” என்றார்.

இதுகுறித்து மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறும்​போது, “மெட்டா நிறு​வனத்​தின் விளக்​கம் ஏற்​புடைய​தாக இல்​லை. பிரதமர் மோடியின் வீடியோவை நீக்​கியதை மிக தீவிர பிரச்​சினை​யாக கருதுகிறோம். இதுதொடர்​பாக மெட்டா நிறுவன மூத்த அதிகாரிகளை நேரில் வரவழைத்து விளக்​கம் கோரப்​படும்” என்று தெரி​வித்​தன.

அமெரிக்​காவை சேர்ந்த மெட்டா நிறு​வனத்தின் அங்கமான இன்​ஸ்​டாகி​ராமில் சிறாரை பாலியல்​ ரீ​தி​யாக துன்​புறுத்​தும் விளம்பரங்​கள் இடம்​பெற்​றது தொடர்​பாக விளக்​கம் அளிக்​கும்​படி மெட்டா நிறு​வனத்​துக்கு மத்​திய அரசு அண்​மை​யில் நோட்டீஸ் அனுப்​பியது. மேலும் வாட்​ஸ் அப் செயலி​யில் யூசர் நேம் திட்​டம் அறி​முகம் செய்​யப்​பட்​டது. இதற்கு மத்​திய அரசு கடும் ஆட்​சேபம் தெரி​வித்​த​தால் இந்​த திட்​டம்​ நிறுத்​தி வைக்கப்பட்​டு இருக்​கிறது.

Spread the love