August 1, 2026

முதல்வர் பதக்கம் வழங்கும் விழாவில் போலீஸ் குடும்பத்தினர் மகிழ்ச்சி

சென்னை: தமிழக காவல்​துறை​யில் சிறப்​பாக பணி​யாற்​றிய அதி​காரி​கள், போலீ​ஸாருக்கு குடியரசுத் தலை​வர், மத்​திய உள்​துறை அமைச்​சர் மற்​றும் தமிழக முதல்​வர் பதக்​கங்​கள் வழங்​கும் விழா, சென்னை எழும்​பூரில் உள்ள ராஜரத்​தினம் மைதானத்​தில் நேற்று மாலை நடை​பெற்​றது. இந்த விழா​வில் முதல்வர் விஜய் சிறப்பு விருந்​தின​ராக கலந்து கொண்டு பதக்​கங்​களை வழங்​கி​னார்.

இந்த நிகழ்​வில், மெய்​சிலிர்க்க வைக்​கும் வகை​யில் இருசக்கர வாகன சாகச நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதற்கு போலீஸ் இன்​ஸ்​பெக்​டர் அன்​பரசி தலைமை தாங்கி பாராட்​டு​களை பெற்​றார். ஆண் காவலர்​களும் பல்​வேறு வகை​யான சாகசங்​களில் ஈடு​பட்டு கைதட்​டு​களை குவித்​தனர்.

50-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் துப்​பாக்​கி​களை கையில் சுழற்​றியபடி இங்​கும், அங்​கு​மாக சென்று பார்​வை​யாளர்​களின் பாராட்​டு​களை பெற்​றனர். ஒவ்​வொரு நிகழ்​வு​களின்​போதும் பின்​னணி​யில் முதல்​வர் நடித்த விஜய் திரைப்​படங்​களின் பாடல்​கள் ஒலித்​தன.

நிகழ்ச்சி முடிந்து முதல்​வர் புறப்​பட்டு சென்ற உடன் பதக்​கம் பெற்​றவர்​கள் தாங்​கள் பெற்ற பதக்​கங்​களு​டன் குடும்​பத்​தினர் மற்​றும் நண்​பர்​களு​டன் போட்​டோ, செல்​பி, வீடியோ எடுத்து மகிழ்ந்​தனர். முன்​ன​தாக நிகழ்ச்சி நடை​பெற்ற ராஜரத்​தினம் அரங்​கத்​தில் ஆயிரக்​கணக்​கானோர் திரண்​டிருந்​தனர்.

சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர்கள் சக்திவேல், ராமமூர்த்தி, பதக்கம் பெற்ற கூடுதல் துணை ஆணையர் சங்கரலிங்கம். ஆவடி நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் மணிவண்ணன். ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன்.

நிகழ்ச்​சியை ஆங்​காங்கே காணும் வகை​யில் டிஜிட்​டல் திரை அமைக்​கப்​பட்​டிருந்​தது. அதில், முதல்​வர் முகம் காண்​பிக்​கும்​போதெல்​லாம் அனை​வரும் உற்​சாக கோஷமிட்​டனர். நிகழ்ச்​சிக்​கான ஏற்​பாடு​களை ஆயுதப்​படை கூடு​தல் டிஜிபி தினகரன் சிறப்​பாக செய்​திருந்​தார்.

பதக்​கம் பெற்​றவர்​கள் ஏமாற்​றம்

பதக்​கம் பெறு​பவர்​கள் அனை​வருக்​கும் முதல்​வர் விஜய் அவரது கைகளாலேயே பதக்​கங்​களை வழங்​கு​வார் என ஆவலுடன் எதிர்​பார்த்​தனர். இந்த காட்​சிகளை காண​வும், மகிழ்ச்​சியை பகிர்ந்து கொள்​வதற்​கும் தங்​களது குடும்​பத்​தினர் மற்​றும் உறவினர்​களை அழைத்து வந்​தனர்.

ஆனால், 72 பேருக்கு மட்​டுமே முதல்​வர் பதக்​கம் கொடுத்​தார். முதல்​வர் கையால் பதக்​கம் பெற முடி​யாத வருத்​தம், ஏமாற்​றம் ஒரு பக்​கம் இருந்​தா​லும், விழா​வில் முதல்​வரைப் பார்த்த மகிழ்ச்​சி​யை போலீ​ஸார்​ மற்​றும்​ அவர்​களது குடும்​பத்​தினரிடம்​ காண முடிந்​தது.

Spread the love