கர்நாடக வருவதை தவிர்க்க வேண்டும் என கர்நாடக முதல்வரே கூறி இருப்பது தமிழக முதல்வர் முகத்தில் கரியை பூசுவது போல் உள்ளது. இது தமிழகத்திற்கு ஏற்பட்ட இழுக்கு. – மு.தமிமுன் அன்சாரி பேட்டி.
தவெக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்ற 6 மாத காலம் அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் மந்நநிலையில் இருந்து விடுபடவேண்டும். – மு.தமிமுன் அன்சாரி பேட்டி
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயகக் கட்சியில் சார்பில் இணைப்பு விழா பேகம்பூர் தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது.
இதில், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் (MJK) தலைவரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது,
நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் சார்பில் ஏற்பாடுசெய்த பரப்புரைக்கு தமிழக அரசு தடை விதித்ததை வன்மையாக கண்டிக்கிறோம்.
திராவிடர் கழகத்தினர் ஒன்றும் தீவிரவாதிகள் அல்ல. ஜனநாயக வழியில் தங்கள் எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்.
நீட் எதிர்ப்பு பரப்புரையை தடுப்பதன் மூலம் த.வெ.க அரசு என்ன செய்தியை தமிழகத்திற்கு சொல்ல வருகிறார்கள்
ஆளுங்கட்சியினர்ஒரு புறம் நீட்டை எதிர்க்கிறோம் என்கிறார்கள். மறுபுறம் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கிறார்கள் என்றால் யாரை திருப்திப்படுத்த இதை செய்கிறார்கள்.
தமிழக முதல்வர் கர்நாடக வருவதை தவிர்க்க வேண்டும் என கர்நாடக முதல்வரே கூறிவிட்டார்.
இது முதல்வர் முகத்தில் கரியை பூசுவது போல் உள்ளது. இது தமிழகத்திற்கு ஏற்பட்ட இழுக்கு.
மேகதாது அணை பிரச்சனை குறித்து அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் கட்சிகளை அழைத்து கருத்துக்களை கேட்க வேண்டும்.
கர்நாடக விஷயத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் தண்ணீர் தரமறுக்கிறார்கள் என்றால் இந்த நேரத்திலாவது தமிழக முதல்வர் வாய் திறக்க வேண்டும்.
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் அதிமுக, திமுக ஆட்சிக்காலங்களில் எடுக்கப்பட்டு வருகிறது. பாஜக தவிர மற்ற கட்சிகள் ஒருமித்த கருத்தாக நீட் விலக்கில் உள்ளது.
தமிழக, கேரள மக்கள் அரசியல் ரீதியாக தெளிவு பெற்றவர்கள்.
நீட் தேர்வு என்பதே அடிநிலைக்கு மக்களுக்கு எதிராக உள்ளது என்பதை தற்போது தான் வடமாநிலங்களில் பேசத்துவங்கியுள்ளனர்.
நீட் தேர்வு குறித்து இவ்வளவு பேர் டெல்லியில் திரண்டதே பாராட்டத்தக்க விஷயம்.
தவெக அரசு நிர்வாகத்தில் மெத்தனமாக இருக்கிறது.
உங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆறு மாத காலம் அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் மந்நநிலையில் இருந்து விடுபடவேண்டும்.
உச்ச நீதிமன்றத்தில் நீட் ஒதுக்கீடு குறித்த வழக்கில் வழக்கறிஞர் நியமிக்காதது குறித்த கேள்விக்கு
அடிப்படையாக செய்ய வேண்டிய நிர்வாக பணியில் அஜாக்கிரதையாக இருக்கிறார்கள்.
உதயநிதி ஸ்டாலினுக்கு மேகதாது அணை குறித்து எந்த விவரமும் தெரியாது என அமைச்சர் நிர்மல் குமார் பேசியது குறித்த கேள்விக்கு
திமுக, அதிமுகவிற்கு தான் காவிரி நீர் பிரச்சனை பற்றி முழு விபரம் தெரியும். இன்று நீங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டு அவர்களுக்கு எதுவும் தெரியாது என்பது உங்களுக்குதான் எதுவும் தெரியவில்லை என அர்த்தம்.
திமுக திட்டங்களுக்கு புதிய பெயரை தவெக அரசு வைப்பது குறித்த கேள்விக்கு
திமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை பெயரை மட்டும் மாற்றம் செய்துவிட்டு ஒழிக்காமல் இருப்பது பாராட்டத்தக்கது.
அமைச்சர் ஆனந்த் மற்றும் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்திக்காதது குறித்த கேள்விக்கு
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களோடு தொடர்பில் இருக்க வேண்டும். பத்திரிகையாளர்களோடு நெருக்கமாக இருக்க வேண்டும். பத்திரிகையாளர்களை சந்தித்தால் தான் நாட்டு நடப்புகள் தெரியவரும்.
முதல்வர் பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும்.
பத்திரிகையாளர்களை சந்தித்தால் தான் அவர் மீதான சரியான புரிதல் இருக்கும்.
சொந்தகட்சிக்கார்கள் தவறு செய்தாலும், எதிர்க்கட்சியினர் தவறு செய்தாலும் உரிய நடவடிக்கை எடுத்தால் தான் மக்கள் சரியான நடவடிக்கை என பார்ப்பார்கள். இல்லையென்றால் மக்கள் விமர்சிப்பார்கள்.
தவெக அரசு செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு
தவெக அரசுக்கு மதிப்பெண் போடும் அளவிற்கு காலம் கனியவில்லை.
6 மாதம் அவகாசம் என்பது கொள்கை கோட்பாடுகளுக்கு இல்லை.
இவர்களின் செயல்பாடு மந்தநிலையில் இருந்து விடுபடவேண்டும்.
திண்டுக்கல்லில் உள்ள ஹைதர்அலி- திப்புசுல்த்தான் மணிமண்டபம் பயனற்று உள்ளது.
புதிய அரசு அதில் நூலகம் அமைக்க வேண்டும். அரசு, தனியார் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும்.
திண்டுக்கல் புதிய பேருந்து நிலையத்தை தற்போது தேர்வு செய்த இடத்திலேயே அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.

More Stories
ஒட்டன்சத்திரம் அருகே 32 1/2பவுன் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது மாவட்ட எஸ்பி பாராட்டு!
திருப்பத்தூர் மாவட்டம்
ஒட்டன்சத்திரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்.