ஒட்டன்சத்திரத்தில் வீடேற்றோர் தங்கும் இல்லம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை. ஒட்டன்சத்திரம் பிப்.திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகரில் வீடற்றோர் மற்றும் ஆதரவற்றவர்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் பாதுகாப்பாக தங்குவதற்கான இல்லம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம்,ரயில் நிலையம், மருத்துவமனை சுற்றி உள்ள இடங்களில் பலர் நிரந்தர வசிப்பிடம் இன்றி தங்கி வருவது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக முதியவர்கள் மனநிலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்ற ஆண்கள்,பெண்கள் இரவு நேரங்களில் கடும் குளிர்,மழை மற்றும் பாதுகாப்பு குறைபாடு போன்ற பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்துஉடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தெரிவித்துள்ளனர்.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்