சென்னை: ‘காவல்துறையினரின் பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்து குறைகளையும் தீர்க்க வேண்டும்’ என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரையிலான நிலையில் உள்ளவர்களுக்கு சிறப்பு ஊதியம், இரவு நேரப் பணிக்கான படிகள், பணி ஆபத்து படிகள் ஆகியவை அதே துறையில் பணியாற்றும் விரல் ரேகை வல்லுநர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இந்த பாகுபாடு களையப்பட வேண்டும்.
இதற்காக சிறப்புக் குழு ஒன்றை அமைத்து ஒரு மாதத்துக்குள் அறிக்கை பெற்று, காவல்துறையினரின் அனைத்து குறைகளையும் தமிழக அரசு தீர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More Stories
“தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி…” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
மண் சரிவு அபாயம் அதிகரிப்பு! கேரளாவின் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை…
பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி சென்னையில் விவசாயிகள் தொடர் காத்திருப்புப் போராட்டம்