February 7, 2026

பாஜக அரசை கண்டித்து நாளை நடைபயணம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

பாஜக அரசை கண்டித்து நாளை நடைபயணம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

Follow Us

சென்னை: தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: ஏழை, எளிய மக்​களின் வாழ்​வா​தா​ர​மாக விளங்​கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை​வாய்ப்பு உறு​தி​யளிப்​புச் சட்​டத்தை சிதைக்​கும் நோக்​கத்​தோடு செயல்​படும் பாஜக அரசைகண்​டித்​து, அகில இந்​தியகாங்​கிரஸ் கமிட்​டி​யின் அறி​வுறுத்​தலின்​படி தமிழகம் முழு​வதும் போராட்​டங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

இதன் தொடர்ச்​சி​யாக, பிப்​.5-ம் தேதி (நாளை) மதி​யம் 2 மணி​யள​வில் எனது தலை​மை​யில் சென்​னை, திரு​வள்​ளூர், ஆவடி, செங்​கல்​பட்டு, காஞ்​சி மாவட்ட காங்​கிரஸ் கமிட்டி தலை​வர்​கள் முன்​னிலை​யில் நடைபயணம், கிழக்கு தாம்​பரம்-பாரத மாதா தெரு, வேளச்​சேரி சாலை சந்​திப்​பில் அமைந்​துள்ள காம​ராஜர் சிலை அரு​கி​லிருந்​து, மேற்கு தாம்​பரம் – சண்​முகம் சாலை வரை நடை​பெறவுள்​ளது.

அதனைத் தொடர்ந்து அங்கு மாபெரும் பொதுக்​கூட்​டம் நடை​பெறுகிறது. இதே​போன்​று, பிப்​.7-ம் தேதி திருச்​சி​யிலும், 8-ம் தேதி திண்​டுக்​கல்​லிலும், 9-ம் தேதி தென்​காசி​யிலும், 12-ம் தேதி கோவை​யிலும் நடைபயணம் நடை​பெறும். இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

முதல்​வருக்கு நன்றி: செல்வப்பெருந்தகை வெளி​யிட்ட மற்றொரு அறிக்​கை​யில் “சென்னை – விழுப்​புரம் நெடுஞ்​சாலை​யில் அமைக்​கப்​பட்​டுள்ள பேருந்து நிலை​யத்​துக்கு இந்​திரா காந்​தி​யின் பெயரை சூட்ட வேண்​டுமென்று முதல்​ வருக்கு கோரிக்கை விடுத்​திருந்​தோம்.

அதன்படி இந்​திரா காந்​தி​யின் பெயரை சூட்டி அறி​விப்பு வெளி​யிட்ட முதல்​வருக்கு தமிழக காங்​கிரஸ் சார்​பில்​ நன்​றி” என கூறி​யுள்​ளார்​.

Spread the love