August 10, 2026

மகளின் பிபிஎஃப் நிதியில் இருந்து தந்தை ஜீவனாம்சம் வழங்க முடியாது: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: மகளின் பெயரில் சேமிக்​கப்​படும் நிதி அவரது எதிர்காலத்​துக்​கான மூலதனம் என்​ப​தால், அதிலிருந்து தந்தை ஜீவனாம்சம் வழங்க முடி​யாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்​பளித்​துள்​ளது.

டெல்​லியைச் சேர்ந்த சுதிர் கவாத்ரா என்​பவர், கடந்த 1999-ம் ஆண்​டில் தனது மகள் ஷாம்லி பெயரில் ஒரு வருங்​கால வைப்பு நிதி கணக்​கைத் தொடங்​கி​யுள்​ளார். ஆனால், பின்​னர் மனைவியுடன் கருத்து வேறு​பாடு ஏற்​பட்டு பிரிந்த நிலை​யில் மகள் ஷாமிலி தனது தாயுடன் வசித்து வந்​துள்​ளார். கடந்த 2017-ம் ஆண்டு பிபிஎஃப் முதிர்​வடைந்த நிலை​யில் பணத்தை எடுக்க ஷாமிலி வங்​கியை அணுகிய​போது, தனது தந்தை முழு தொகையை​யும் எடுத்​ததுடன், கணக்கை மூடி​விட்​ட​தாக தகவல் தெரிவிக்கப்​பட்​டுள்​ளது.

அந்​தப் பணத்தை மீட்​டுத் தரக்​கோரி ஷாமிலி நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர்ந்​தார். அதில், தன் தாய்க்கு நிதிச் சுமையை ஏற்​படுத்​து​வதற்​காக, தன் தந்தை வேண்​டுமென்றே பிபிஎஃப் தொகையை எடுத்து விட்​ட​தாக​வும், அதனால், தற்​போது கல்விக் கட்​ட​ணம் கூட செலுத்த முடி​யாத நிலை​யில் தான் இருப்​ப​தாகவும் குற்​றம் சாட்​டி​யிருந்​தார்.

அந்த வழக்கை விசா​ரித்த டெல்லி மாவட்ட நீதி​மன்​றம், ஷாமிலியின் வைப்பு நிதியி​லிருந்து எடுக்​கப்​பட்ட முழு தொகையை​யும் 8 சதவீத வட்​டி​யுடன் வழங்க தந்தை சுதிர் கவாத்ரா​வுக்கு உத்​தர​விட்​டது. அந்த உத்​தர​வுக்கு எதி​ராக சுதிர் கவாத்ரா டெல்லி உயர் நீதி​மன்​றத்தை அணுகி​னார்.

அந்த மனு டெல்லி உயர் நீதி​மன்​றத்​தில் நீதிபதி நீனா பன்​சால் கிருஷ்ணா முன்பு விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, சுதிர் கவாத்ரா தரப்​பில், இந்த வருங்​கால வைப்பு நிதிக் கணக்​கில் இருந்த தொகை​யைக் கொண்டு மனை​விக்கு கூடு​தல் ஜீவனாம்சம் வழங்​கு​வ​தாக​வும், அந்​தப் பணத்தை ஷாம்​லி​யும் பயன்​படுத்தி வரு​வ​தாக​வும் தெரிவிக்​கப்​பட்​டது.

ஆனால், அந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிப​தி, நீதி​மன்ற உத்தரவின்​படி ஜீவ​னாம்​சம் வழங்​கு​வது என்​பது தந்​தை​யின் சட்டப்​பூர்​வக் கடமை ஆகும். எனவே, ஜீவ​னாம்​சத்​தை​யும், வைப்பு நிதி​யை​யும் ஒன்​றாகக் கருத முடி​யாது. மகளின் பெயரில் சேமிக்கப்​படும் நிதி என்​பது அவரது எதிர்​காலத்​துக்​கான மூலதனம் என்​ப​தால், அதிலிருந்து தந்தை ஜீவ​னாம்​சம் வழங்க முடி​யாது. மேலும், வருங்​கால வைப்பு நிதிக்​கான முதலீடு தந்​தையால் செய்​யப்​பட்​டிருந்​தா​லும், கணக்கு மகளின் பெயரில் உள்ள​தால் முதிர்​வுத் தொகை முழு​மை​யாக மகளுக்கே சேரும்.

எனவே, தந்தை தான் செலுத்த வேண்​டிய ஜீவ​னாம்​சத் தொகையை, மகளின் வைப்பு நிதி கணக்​கி​லிருந்து வழங்க முடியாது என தீர்ப்​பளித்​தார். மேலும், பிபிஎஃப் கணக்​கி​லிருந்து எடுக்​கப்​பட்ட முழுத் தொகை​யை​யும் 8 சதவீத வட்​டி​யுடன் வழங்க வேண்​டும் என்ற மாவட்ட நீதி​மன்​றத்​தின் தீர்ப்​பை உறுதிப்படுத்துவ​தாக​வும் நீதிப​தி தெரிவித்​துள்​ளார்​.

Spread the love