August 17, 2026

இந்தியாவில் ரப்பர் விலை புதிய வரலாற்று உச்சம்..! கிலோ ரூ.275 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் இயற்கை ரப்பர் விலை கிலோவுக்கு ரூ.275 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த அதிக விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால் ரப்பர் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு பிறகு ரப்பர் விலை கிலோ ரூ.275ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. இதற்கு முன்னர் 2010-ஆம் ஆண்டில் ரப்பர் விலை கிலோ ரூ.255 என்ற உச்சத்தை தொட்டிருந்தது. 15 ஆண்டுகளுக்கு பிறகு ரப்பர் விலை இவ்வளவு அதிகரித்துள்ளதற்கு ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி, அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக இருக்கிறது. இது குறித்து பேசி இருக்கும் நிபுணர்கள் சர்வதேச அளவில் வாகன உற்பத்தி மற்றும் டயர் தயாரிப்புக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.

அதே போல கச்சா எண்ணெய் விலை உயர்வால் செயற்கை ரப்பரின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால், டயர் நிறுவனங்கள் இயற்கை ரப்பரை நோக்கி நகர்வதும் முக்கிய காரணமாக கூறுகின்றனர். மேலும் முன்னணி ரப்பர் உற்பத்தி நாடுகளில் இருந்து வரும் ரப்பர் வரத்து குறைவு மற்றும் உலகளாவிய தேவை-உற்பத்திக்கு இடையேயான இடைவெளியும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது.

Spread the love