August 18, 2026

கிருஷ்ணகிரி அருகே ஆற்றில் மூட்டை மூட்டையாக கொட்டிய மல்லிகை: விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டினத்தில் போதிய விலை இல்லாமல் தென்பெண்ணை ஆற்றில் மூட்டை மூட்டையாக 1.5 டன் மல்லி பூக்கள் வீசப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2500 ஏக்கர் பரப்பளவில் மல்லி பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. தினந்தோறும் மல்லி பூக்கள் அறுவடை செய்யப்பட்டு சேலம், பெங்களுரூ, திருப்பத்தூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்ட் தொழிற்சாலையில் அனுப்பபடும் மலர்ந்துள்ளதாலும், பூக்களில் பூழுக்கள் தாக்கம் அதிகமாக உள்ளதால் மல்லி பூக்கள் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்நிலையில் நேற்று இரவு காவேரிப்பட்டினத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் மூட்டை மூட்டையாக சுமார் 1.5 மல்லி பூக்களை விவசாயிகள் ஆற்றில் வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்பகுதியில் இருந்து பெங்களுரூ, மைசூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் சென்ட் தொழிற்சாலைக்கு மல்லி பூக்கள் அனுப்பட்டு வரும் நிலையில் போதிய விலை கிடைக்காததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். இதனால் பூக்களை விற்க முடியாமல் தென்பெண்ணை ஆற்றில் மூட்டை மூட்டையாக வீசி சென்றுள்ளதாக மல்லி பூக்கள் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Spread the love