February 7, 2026

இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அடுத்த வாரம் கையெழுத்து: தகவல்

இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அடுத்த வாரம் கையெழுத்து: தகவல்

Follow Us

புதுடெல்லி: இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் அடுத்த வாரம் கையெழுத்தாக உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் கூறி இருப்பதாவது: இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் அடுத்த வாரம் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் டெல்லிக்கு வர இருக்கிறார்கள். ஒப்பந்த விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

விவசாயம், பால் வளம், மீன்வளத்துறை ஆகியவற்றில் இந்திய அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை. நமது நாட்டின் விவசாயிகள், மீனவர்களின் நலன்கள் போதுமான அளவு பாதுகாக்கப்பட்டுள்ளன. ஓமன், பிரிட்டன், நியூசிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் இதற்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்திலும் அந்த நாடுகளுக்கு எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்காவிடம் இருந்து 500 பில்லியன் டாலர் அளவுக்கு பொருட்களை கொள்முதல் செய்யவும் பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.

வெள்ளை மாளிகையில் செவ்வாய் கிழமை (பிப். 3) செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க பத்திரிகைச் செயலாளர் கரோலின் லெவிட், ‘‘அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்திய பிரதமர் மோடியுடன் சிறப்பான ஒரு தொலைபேசி உரையாடலை நடத்தினார். அதன்மூலம், இந்தியாவுடன் சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளார்.

பிரதமர் மோடியுடன் அவர் நேடியாகப் பேசினார். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் நல்ல உறவை கொண்டிருக்கிறார்கள். அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடனான உறவை மிகவும் விரும்புகிறார், பிரதமர் மோடி மீதும் இந்தியா மீதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளார்.

Read More

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதோடு மட்டுமல்லாமல், அமெரிக்காவிடம் இருந்தும், வெனிசுலாவிடமிருந்தும்கூட எண்ணெய் வாங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இது அமெரிக்காவுக்கும் அமெரிக்க மக்களுக்கும் நேரடி பலன்களைத் தரும். வெனிசுலாவின் வர்த்தகத்தையும், அதன் எண்ணெய் விற்பனையையும் அதிபர் ட்ரம்ப்பும் அவரது தேசிய பாதுகாப்புக் குழுவும் நேரடியாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.

எரிசக்தி, போக்குவரத்து, விவசாயப் பொருட்கள் ஆகியவற்றை 500 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்ய மோடி உறுதி அளித்துள்ளார். இந்தியா மீதான அமெரிக்க வரி 18% ஆக இருக்கும். அதேநேரத்தில், அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு இந்தியாவில் பூஜ்ஜிய வரி விதிக்கப்படும். எனவே இது ஒரு சிறந்த ஒப்பந்தம். அமெரிக்க தொழிலாளர்கள், வணிகங்கள், நுகர்வோர் அனைவருக்கும் இது ஒரு பெரிய வெற்றி’’ என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love