ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பாவை பவுண்டேஷன் சார்பில் மருத்துவப் பயன்பாட்டிற்கான பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலர்கள் டாக்டர் அனுசோபா, டாக்டர் நாக் மணிகண்டன் ஆகியோர் தலைமை வகித்தனர். SHN, VHN, MLHP, மருந்தாளுநர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை பாவை பவுண்டேஷன் ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் மேற்கொண்டார்.
கிராமப்புற மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவை கிடைக்க உதவும் வகையில் மருத்துவ உபகரணங்களை வழங்கிய பாவை பவுண்டேஷனுக்கு, சுகாதார நிலைய மருந்தாளுநர் ஆறுமுகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

More Stories
திருப்பூர் குப்பை பிரச்சனைக்கு தீர்வு காண முதலமைச்சரை சந்திக்க அனைத்து கட்சிகளும் முடிவு..!!
26-08-2026
திருப்பூரில் தேமுதிக சார்பில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த தின விழா