சென்னை: கிராண்ட் செஸ் டூர் இறுதிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு முதல்வர் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள தமிழகத்தின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகின் தலைசிறந்த வீரர்களுடன் நடைபெற்ற போட்டிகளில், அபாரமான மன உறுதியுடனும், மதிநுட்பத்துடனும் விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பது அவரது அசாதாரண ஆற்றலுக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.
இந்த மகத்தான வெற்றி, இளம் தலைமுறையினருக்குப் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிப்பதோடு, தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளது. உலக அரங்கில் மேலும் பல சாதனைகளைப் படைக்க பிரக்ஞானந்தாவை மனமார வாழ்த்துகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
நடப்பு கிராண்ட் செஸ் டூர் தொடரின் இறுதிப் ஆட்டங்கள் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் செஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா 15-13 புள்ளிகள் கணக்கில் அமெரிக்காவின் பேபியானோ கருனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

More Stories
காவல், தீயணைப்புத் துறைக்கு ரூ.165 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்
சென்னையில் இருந்து சென்ற 49 பேர் நேபாள வெள்ளத்தில் சிக்கியதாக அச்சம்
“காவிரி டெல்டாவை வறட்சிப் பகுதியாக அறிவிக்கக் கோரி ஆக.28-ல் இ.கம்யூ போராட்டம்” – மு.வீரபாண்டியன்