August 31, 2026

ஏனாமில் ரூ.24,000-க்கு விலை போன ‘புலசா’ மீன்!

புதுச்சேரி: மீன் வகைகளிலேயே ‘ராஜா வாக’க் கருதப்படும் ‘புலசா’ மீன்கள் தற்போது புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் கிடைக்கின்றன.

இனப்பெருக்கத்துக்காக கடல் நீரிலிருந்து ஆறுகளின் முகத்துவாரப் பகுதிகள் மற்றும் கலப்பு நீர் (உப்பு மற்றும் நன்னீர் கலந்த நீர்) கொண்ட இடங்களுக்கு இந்த மீன்கள் வருகின்றன.

ஏனாமில் மீனவர் ஒருவரால் பிடிக்கப்பட்ட 1.300 கிலோ எடையுள்ள புலசா மீன் ஒன்றை, பார்வதி என்ற மீன் வியாபாரி 24,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.

இந்தப் பருவத்தில் இதுவே அதிக விலைக்கு ஏலம் போன மீன் ஆகும். கடந்த பருவத்தின் போது ஒரு மீன் 30,000 ரூபாய் வரை ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.ரூ.24 ஆயிரத்துக்கு விலை போன மீன்.

Spread the love