சென்னை: தமிழக அரசு மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நடத்தப்படும் டிஎன்பி எஸ்சி குரூப் 2, 2ஏ போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நடத்தப்படும் குரூப் 2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு பட்டப்படிப்பு படித்தவர்கள் செப். 9-ம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு, தேர்வு நடைமுறை, பாடத் திட்டம் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் https://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் உள்ளன.
இந்த தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்புகள் செப்.3-ம் தேதி (நாளை) காலை 10.30 மணிக்கு தொடங்குகின்றன.
வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் மாநில அளவிலான முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். பயிற்சி வகுப்பில் சேர விருப்ப முள்ளவர்கள் https://forms.gle/z3LzaGSpNeA1djJ76 என்ற கூகுள் படிவத்தில் தங்களது விவரங்களை நிரப்பி, தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி சேர்ந்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு decgcguindy@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More Stories
தமிழகத்தில் வெளிநாட்டு பல்கலை. தொடங்க அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் கடும் எதிர்ப்பு
பிஎட், எம்எட் மாணவர் சேர்க்கைக்கு விவரம் சமர்ப்பிக்க அவகாசம்
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் கவிதா தகவல்