September 9, 2026

தமிழக காங்கிரஸ் சமூக ஊடகப் பிரிவு தலைவராக விஜய் வசந்த் நியமனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்​சி​யின் சமூக ஊடகப் பிரி​வின் தலை​வ​ராக விஜய் வசந்த் எம்​.பி. நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

இது தொடர்​பாக அகில இந்​திய காங்​கிரஸ் கமிட்​டி​யின் பொதுச்​செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “தமிழக காங்​கிரஸ் கட்​சி​யின் சமூக ஊடகப் பிரிவுக்​கான மாநிலத் தலை​வர் மற்​றும் ஒருங்​கிணைப்​பாளர்​களை நியமிக்​கும் முன்​மொழி​வுக்​குக் காங்​கிரஸ் தலை​வர் ஒப்​புதல் அளித்​துள்​ளார்.

இந்த நியமனங்​கள் உடனடி​யாக அமலுக்கு வரு​கின்​றன. அதன்​படி பிரி​வின் மாநிலத் தலை​வ​ராக விஜய் வசந்த், ஒருங்​கிணைப்​ பாளர்​களாக சக்தி மாரி​தாசன், ஜி.கே.​முரளிதரன், சிவசத்​ய​ராஜா குணசேகரன், சஞ்​சய் காந்​தி, ஜான் சாமுவேல், அப்​துல் ரஹ்​மான் ஆகியோர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்” எனக் கூறப்பட்டுள்ளது​.

Spread the love