செப் 14
வீரத்தமிழர் மக்கள் கட்சி & வெள்ளாளர் முன்னேற்ற கழகம் இணைந்து திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பு கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 155 வது பிறந்தநாள் விழா ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை, பிறந்தநாள் விழா மாவீரன் தானாபதி பிள்ளை நினைவேந்தல் விழா ஆகிய முப்பெரும் விழாவினை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவர்களது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு பின்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கும் விழா மிக விமர்சையாக நடைபெற்றது விழாவிற்கு மாநில பொருளாளர் சுபிராஜ் முருகேசன் தலைமை வாங்கினார் மாவீரன் பிரபாகரன் போர்படையின் தலைவர் அன்பரசு முன்னிலை வகித்தார் மாநில பொதுச் செயலாளர் பந்தல் ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்தார் இந்த நிகழ்வில் பாஜக மாவட்ட தலைவர் சீனிவாசன். அதிமுக மாவட்ட செயலாளர் வேல் குமார் சாமிநாதன் பகுதி செயலாளர்கள் வானவில் கனகராஜ்.விஜயகுமார். உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர் இந்த நிகழ்வில் விழா கமிட்டி நிர்வாகிகள் பழக்கடை தேனி முருகன்.ராமமூர்த்தி.ரத்திஷ்.செந்தில், முத்துராஜ்,செந்தில்,ஜெயகுமார்,சேனைமுத்து,லட்சுமணன்,முத்து,ராமசாமி, உள்ளிட்ட திருப்பூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கோயம்புத்தூர் நிர்வாகிகளும் பொதுமக்களும் பெருந்திரளாக விழாவில் பங்கேற்றனர் விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கி பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டது….

More Stories
கரூர் மாவட்டம்
பழனி
நாமக்கல் மாவட்டம்